புத்தகம் பற்றி
80 மற்றும் 95 ஆண்டுகளில் பிறந்தவர்களின் வாழ்வியலை அழகாய் ஆவனப்படுத்தி இருக்கும் புத்தகம்.
அன்றைய பள்ளிக்கூடங்களில் கல்வியோடு சேர்த்து நல்ல பண்புகளையும் போதித்து இருக்கிறார்கள்.Smart Classes Tution Centers என்ற பெயரில் பெற்றோர்களின் சேமிப்பை விழுங்காத கல்வி சூழல் அன்றைய காலங்களில் இருந்தது.வீட்டு பாடமோ வகுப்பு பாடமோ எல்லாமும் ஒரு கருப்பு Slate ல் தான் எழுதி இருக்கிறார்கள். வகுப்பில் சன்டைகள் வரும் போது முதலில் உடைபடுவது அந்த கருப்பு Slateகள் தான். அடுத்தது 80-90களில் பிறந்தவர்களுக்கு பல்பம் அல்லது கல்குச்சி சாப்பிடும் பழக்கம் நிறைய பேருக்கு இருந்து இருக்கும். 80-90 களில் அநேக ஆசிரியைகளின் Uniform ஆக குடை
பூ போட்ட சேலை ஒரு கண்ணாடி இவை தான் இருந்துள்ளது
School Inspection என்றால் ஒரு வாரம் முன்பே அதற்கான ஒத்திகைள் தொடங்கி விடும். 80 -90 களில் விளையாட்டும் உணவுமுறைகளும் கூட இயற்கையோட சேர்ந்ததாவே இருந்துள்ளது. 80களில் பிறந்தவர்களுக்கு வருடத்திற்கு அதிக பட்சமாக மூன்று முறை புத்தாடைகள் தரப்பட்டு இருக்கிறது. பெரும்பாலும் அது அளவெடுத்து தைத்த உடைகளாகத்தான் இருந்திருக்கிறது. அரைக்கை சட்டையும் அரைக்கால் Touser ம் தான் 80 களில் பிறந்தவர்களுக்கு புது துணியாக இருந்திருக்கிறது… 80களின் காலங்களின் பெரும்பாலான இளைஞர்கள் Bell Bottom Pant ஐ தங்களின் விருப்ப உடையாக அணிந்திருக்கிறார்கள்.தெருவுக்கு ஒரு வீட்டிலோ அல்லது இரண்டு வீட்டிலோ தான் கலர் டிவியும் Telephoneம் இருந்து இருக்கிறது.
தந்தியை 80களில் வாழ்ந்த மக்கள் மரண சாசனமாத்தான் பார்த்து இருக்கிறார்கள். தூர்தர்ஷன் சேனல் தான் ஒரே பொழுது போக்காக இருந்திருக்கிறது. செய்தி வாசிப்பில் இரைச்சலான பின்னனி இசையோ அச்சுறுத்தும் வகையான குரல் உச்ரிப்போ இல்லாமல் அன்றைய செய்தி வாசிப்பாளர்கள் மிக சாதரமாக செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறார்கள். ஆகாஷ வானியில் “செய்திகள் வாசிப்பது சரோஜ் நாரயண சுவாமி” என்ற குரலுக்கு சொந்தக்காரர் ஒரு பெண் என இந்த புத்தகத்தின் வழியாக தெரிய வந்தது.
90களின் ஆரம்பத்தில் தான் Dek Player அறிமுகம் ஆனது. Video Dec வைத்திருப்பதை அன்றைய குழந்தைகள் கௌரவமாகவும் பெருமையாகவும் கருதினார்கள்.
80-90 களில் தெருவுக்கு தெரு வாடகை சைக்கிள் கடைகள் இருக்கும். நம்மில் அநேகம் பேர் அங்கு தான் நம் முதல் சைக்கிள் ஓட்டிய அனுபவத்தை பெற்றிருப்போம்.
அதுவும் காலே எட்டாத பெரிய சைக்கிள் எடுத்து கொரங்கு பெடல் போட்டு ஓட்டியது சிகரெட் அட்டை, பலூன் Wheel la மாட்டி ஓட்டியது
மயில் முடிய புத்தகத்தோட நடுவுல வெச்சி அதுக்கு தெனம் பென்சில் துகல போட்டா அது குட்டி போடும்னு நம்பியது, நமக்கு புடிச்ச பொண்ணு கிட்ட பேசக்கூட தைரியம் இல்லாம அவ பேரையும் நம்ம பேரையும் Flames போட்டு பாத்து அதுல M னு வந்தா அவ தான் தன்னோட ஆளுனு நம்பியது, வீட்ல அப்பா அம்மா உன்ன ஆஸ்பத்ரில தொட்டி மாத்தி எடுத்துட்டு வந்தோம். தவுட்டுக்கு தான் உன்ன வாங்கினோம்னு சொல்றத அப்படியே நம்பிய அப்பாவி குழந்தைகள் இந்த 90s கிட்ஸ். Hero Pen Light Shoe Magnetic Box இதெல்லாம் 90 களில் பிறந்த நடுத்தர குடும்பத்து குழந்தைகளுக்கு பெரும் கணவாக இருந்தது என சொல்லலாம்.10 12வது பரிச்சை முடிஞ்ச கடைசி நாள் அத்தனை பேரோட Uniform ம் Ink ஆல அபிஷேகம் பன்னிருப்பாங்க.
90 கள்ல ரொம்ப அதிகமான Pocket Money 5 ரூபாயா இருந்தது. 90 களில் பிறந்தவங்களோட அபிமான தின்பன்டங்கள் இவை தான்.
தேன் மிட்டாய்
உரல் மிட்டாய்
இலந்தை பழம்
இலந்தை பொடி
மரவல்லி கெழங்கு
மாங்கா ஊருகாய்
ஆசை சாக்லேட்
மம்மி டாடி மிட்டாய்
பால் ஐஸ்
சேமியா ஐஸ்
ஜவ்வு மிட்டாய்
மேங்கோ ஐஸ் Parle G
5 பைசா பிஸ்கட்
கடலை மிட்டாய்
எள்ளு மிட்டாய்
அசோகா மிட்டாய்
இப்படி அடுக்கிட்டே போலாம்.
90களின் அபிமான பொழுது போக்கு நிகழ்ச்சிகள்
சித்தி
தங்க வேட்டை
செம்பா
குடும்பம்
கணவருக்காக
நிம்மதி நிம்மதி உங்கள் சாய்ஸ்
சின்ன பாப்பா பெரிய பாப்பா
சக்தி மான்
ஷகலக பூம் பூம்
ஜி பூம் பா
சென்ற வார உலகம்
மர்மதேசம்
மாயா மச்சிந்ரா
விடாது கருப்பு
Top 10
திரை விமர்சனம்
கோலங்கள்
அரட்டை அரங்கம்
லலிதாவின் பாட்டுக்கு பாட்டு
நேருக்கு நேர்
நிஜம் நடந்தது என்ன?
கணா காணும் காலங்கள்
காதலிக்க நேரமில்லை
Tom @ Jerry
Power Puff Girls
Timon and Pumba
Spd Emergency
இப்படி நிறைய சுவாரஸ்யமான தொடர்களை சொல்லலாம்.
லீவ் கெடச்சா போதும் கிரிகெட்டே கதினு கடந்த நாள்லாம் உண்டு.இது போக கோலி விளையாட்டு சோடா மூடி விளையாட்டு ஏர்கல்லு விளையாட்டு பம்பர விளையாட்டு இப்படி சொல்லிக்கிட்டே போலாம்.
அப்போ மொட்ட வெயில்ல ஆடுன விளையாட்டு தந்த கிக்கு இந்த 2K கிட்ஸ் Smart Phone ல ஆடுற எந்த விளையாட்டும் தராது. அப்போ எந்த சின்ன நோய்கள் வந்தாலும் பாட்டி வைத்தியம் தான் மொதல்ல.
80 90 கள்ல கூட்டு குடும்ப கலாச்சாரம் இருந்துச்சு இப்போ அப்பா அம்மா ஒரு கொழந்தை இருந்தாலே Family nu சொல்லிடுறாங்க. அப்போ நடந்த கல்யாண விஷேசங்கள் சொந்தமெல்லாம் கூடும் சந்தோஷமான நிகழ்வா இருந்துச்சு செலவும் கம்மியா இருந்துச்சு. இப்போ கல்யானம்னா எல்லாமே காண்ட்ராக்ட் காரங்க கைல கொடுத்துட்டு போயிடராங்க….
இந்த புத்தகத்தை வாசிச்சு முடிச்சப்ப ஒருமுறை அந்த பழைய வாழ்கைய வாழ்ந்து பார்த்த உணர்வு எனக்கு ஏற்பட்டுச்சு. இந்த புத்தகத்த படிக்கிற 80ஸ் மற்றும் 90ஸ் கிட்ஸ்க்கும் இதே உணர்வு ஏற்படும். இந்த புத்தகம் மூலமா என்னை 90களின் நினைவுகளுக்குள் பயனிக்க வெச்ச திரு. சரவனன் தங்கப்பா அவர்களுக்கு என் மனப்பூர்வமான நன்றிகள்.
2K கிட்ஸ் யாராவது 80s – 90ஸ் கிட்சோட வாழ்வியலை தெரிஞ்சிக்க விரும்புனா நீங்க தாராளமா 80களின் காலம் புத்தகம் வாங்கி படிச்சு பாருங்க… ஒரே வரில சொல்லனும்னா “80களின் காலம்” நினைவுகளின் பெட்டகம்.
save
₹10.0080 களின் காலம்/80s periods
₹90.00₹100.00
| book-author | |
|---|---|
| format |
Customer Reviews
There are no reviews yet.









Be the first to review “80 களின் காலம்/80s periods”